வேலைவாய்ப்புக்கு தயாராவது குறித்து தனியார் நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாண்மை நிறுவனர் சுஜித்குமார் பேசியது:
மாணவர்கள் சுய விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கும் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் மனநிலையில் பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து, நல்ல முறையில் படித்தால் மட்டும் போதாது. அத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு பணிக்கும் செல்லும் வேலைவாய்ப்பை எப்படி தயார்படுத்திக் கொள்வது என்பதை நன்கு சிந்திக்க வேண்டும்.
படிக்கும்போதே, ஆர்வத்தை அடித்தளமிட்டுக் கொள்ள வேண்டும். படிப்பில் முக்கியத்துவம் செலுத்துவதுபோல், பணிக்குச் செல்லும் இடத்திலும் நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தை செய்யும்போது, அது, தவறா, சரியா என்ற சிந்தனையுடன் இறங்க வேண்டும். உங்களுக்குள் அத்தனை திறமைகளும் ஒளிந்திருக்கின்றன. அதை வெளிப்படுத்த முடியாமல் திணறுகிறீர்கள்.
பணிக்குச் செல்லும் இடத்தில், சிலருக்கு குழு சார்ந்த பணிகள் அமைய வாய்ப்புள்ளது. குழு சார்ந்த பணியில் ஈடுபடும்போது, அதற்கேற்ப, முன்னதாகவே நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, சந்தோஷத்தையும், வேலைவாய்ப்பையும் தரக்கூடிய துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.
கிடைக்கும் நேரத்தில், ஆங்கிலம் மட்டுமின்றி, அத்தனை மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் மனிதனுக்கு கொடுத்த மிக அற்புதமான கருவியான, மூளையை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்பவனே புத்திசாலி.
சீனாவில், "சைனீஸ் பாமுன்ட்ரி" என்ற மரம், விதைத்த நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் கழித்தே செடியாகவே முளைக்க ஆரம்பிக்கும். ஐந்து ஆண்டு கழித்து வளர ஆரம்பித்ததும், ஆறே வாரத்தில் 90 அடி உயரமாக வளரும். 90 அடி வளர்வதற்கு ஏற்றாற்போல், ஐந்து ஆண்டு மண்ணுக்குள் வேர்ப்பிடிமானத்தின் பலத்தை, வளர்த்துக் கொண்டிருக்கிறது.
அதேபோல், மாணவர்களும் படிக்கும்போதே, பணிக்குச் செல்ல வாய்ப்புள்ள, "பர்சனல் ஆட்டிடியூடு"-ஐ வளர்த்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...