"பெற்றோருக்கு உதவி செய்ய மனம் வராமல், கோர்ட்
படியேறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது," என, கர்நாடக
ஐகோர்ட் நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.
ஊட்டி ஜே.எஸ்.எஸ்., சர்வதேச பள்ளியில், ஆளுமைத்
திறன் மேம்பாடு குறித்த, ஐந்து நாட்கள் பயிற்சி கருத்தரங்கு, நேற்று
துவங்கியது. கர்நாடக ஐகோர்ட் நீதிபதி அசோக் ஹிங்கெரி பேசுகையில்,
"தெரியாமல் பலர், தவறு செய்து விடுகின்றனர். நிர்கதியாய், ஆதரவற்ற
தாய்மார்களுக்கு, மாதம் குறைந்தது 500 ரூபாயாவது வழங்க, அவர்களது பிள்ளைகள்
முன்வர வேண்டும் என, சட்டம் கூறுகிறது.
ஆனால், 500 ரூபாயை கூட, தாய்க்கு கொடுக்க மனம் வராமல், அதற்கு வசதியில்லை எனக் கூறி, பல இளைஞர்கள் கோர்ட் படியேறுகின்றனர்; இந்நிலை மாற வேண்டும்," என்றார். கர்நாடக மாநில நீர் வளத்துறை முதன்மை செயலர் சத்யமூர்த்தி தலைமை வகித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...