அரசு, நகராட்சி பள்ளி ஆசிரியர் கலந்தாய்வுக்கான
ஆன்லைன் விண்ணப்ப பதிவு, சர்வர் பிரச்னையால் ஒரு நாள் தாமதத்துக்கு பிறகு
தொடங்கியது.வரும் 2013&14ம் கல்வி ஆண்டுக்கு ஆசிரியர்களுக்கான
இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இடமாறுதல் ஆன்லைன் மூலம் வழங்கப்படும்
என்றும், மாவட்டத்துக்குள் மாறுதல் கோருபவர்களின் விண்ணப்பங்கள்
தனியாகவும், மாவட்டம் விட்டு மாவட் டம் மாறுதல் கோருபவர்களின்
விண்ணப்பங்கள் தனியாகவும், இணையதளத்தில் தொகுத்து பதிவு செய்யப்படும் என
தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. மாவட்டத்துக்குள் மற்றும்
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் தலைமை ஆசிரியர்கள், உரிய விண்ணப்ப
படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலரிடம் நேரடியாக மே 14 முதல் வரும் 18ம் தேதி வரை ஒப்படைக்கலாம் என
அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால், நேற்று முன்தினம் சென்னை தலைமையிடத்தில்
கம்ப்யூட்டர் சர்வர் இயங்காததால், பதிவு தடைபட்டது. இதனால் ஆசிரியர்கள்
ஏமாற்றம் அடைந்தனர்.இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்று (புதன்) காலை,
நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான
விண்ணப் பங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் பணி தொடங்கியது. மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் காதர் சுல்தான், பணியை பார்வையிட்டு ஆய்வு
செய்தார். மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான அரசு மற்றும் நகராட்சி
பள்ளிகளின்ஆசிரியர், ஆசிரியைகள் காலை முதல் குவிந்தனர். வரிசையில்
காத்திருந்து அவர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்தனர். 18ம்தேதி
வரை இப்பணி மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...