அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள்
தொடங்குவதை தமிழக முதல்வர் கைவிட வலியுறுத்தி தமிழக மாணவர் முன்னணி
அமைப்பாளர் வே.சுப்பிரமணியசிவா தலைமையில் ஆ.குபேரன், பாலு, ஜான்பாண்டியன்,
மணிமாறன், பவித்ரா, யவனராணி உள்ளிட்ட சுமார் 50 மாணவ, மாணவியர்கள் ஊர்வலமாக
சென்று சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். பின்னர் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியத்திடம் கோரிக்கை
அடங்கிய மனுவை அளித்தனர்.
மாணவர்களை கண்டித்த உதவிஆட்சியர்: தமிழக மாணவர் முன்னணியினர் ஊர்வலமாக உதவிஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து மனு அளிக்கச் சென்றனர். ஆனால் உதவிஆட்சியர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் இருந்ததால் மாணவர்கள் ஊர்வலமாக அங்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்து மனு அளிக்க சென்றனர். அப்போது ஜமாபந்தி நிகழ்ச்சியின் போது இங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மனு கொடுப்பது தவறான செயலாகும் என உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் மாணவர் முன்னணி நிர்வாகிகளை கண்டித்தார். பின்னர் மாணவர் முன்னணி நிர்வாகிகள் உதவிஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாணவர்களுக்கு உதவிஆட்சியர் எச்சரிக்கை விடுத்து மனுவை பெற்றுக் கொண்டார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...