கோவா மாநிலத்தில் தேசிய அளவில் நடந்த அபாகஸ் போட்டியில் நெல்லை, குமரி மாவட்ட மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர்.
கோவா மாநில தலைநகர் பனாஜியில் தேசிய அளவில்
மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக
ஐ.எம்.ஏ.,எனப்படும் அபாகஸ் போட்டி நடந்தது. இப்போட்டியில் நாட்டின் பல்வேறு
மாநிலங்களில் இருந்தும் சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவ,
மாணவிகள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்து 15 பேர் கலந்துகொண்டனர். பாளை.என்ஜி.,காலனி சவுத் இந்தியா நாலெட்ஜ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் முத்துக்குமார் தலைமையில் 7 மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.
இதில் ஹரிஹரராஜ், சுஜித் குமார் ஆகியோர் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர். குமரி மாவட்டம் தெரிசனங்தோப்பு பகுதியை சேர்ந்த கவுஷிகா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் பயிற்சியாளர் அய்யப்பன் தலைமையில் சென்ற மாணவர்களில் அருண், சுடலையாண்டி, பிரவின் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர். லட்சுமி, தங்கம் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவிகளை அவர்களின் பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...