அரசு பள்ளிகளில் கடந்த முறை லேப்-டாப்
வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடியை தவிர்க்க,பள்ளி திறக்கும் முன்பே இதற்கான
பட்டியலை பள்ளி கல்வித்துறை சேகரிக்கிறது.
அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும்
பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்களை அரசு வழங்குகிறது. 2011-12ல்
லேப்-டாப் வழங்கியதில் சில இடங்களில் குளறுபடி ஏற்பட்டது. மானாமதுரை அருகே
உட்பட ஒரு சில பள்ளிகளில் இருப்பு வைத்திருந்த லேப்-டாப்கள் திருடுபோனது.
தேர்வு முடித்து சென்ற சில மாணவர்கள் லேப்-டாப்களை வாங்கவில்லை என்ற புகாரும் எழுந்தது. இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த ஆண்டு லேப்-டாப் பெற்றவர்கள், இவ்வாண்டுக்கு தேவையான லேப்-டாப் விவரங்களை பள்ளி திறக்கும் முன்பே சேகரிக்க, சி.இ.ஓ.,அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...