திறந்தவெளி பல்கலையில் பட்டப்படிப்பு
படித்தாலும், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு அந்த தகுதி
அங்கீகரிக்கப்படும் என்று 2012ல் அரசாணை வெளியிடப்பட்டாலும், திறந்தநிலை
பல்கலை தகுதியுடையோருக்கு, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு அளிக்க முடியாது
என்று அமைச்சர் முனுசாமி அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் பணிபுரிவோர், பதவி
உயர்வுக்காக, திறந்தவெளி பல்கலை மூலம் பட்டம் பெறுகின்றனர். அவ்வாறு பட்டம்
பெறுபவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க முடியாது என,
ஏப்ரல் 30ம் தேதி, சட்டசபை கூட்டத்தொடரில் நடந்த நீதி நிர்வாகம் மீதான
மானிய கோரிக்கையின்போது, தமிழக நீதி நிர்வாகம் மற்றும் சிறைச்சாலைகள் துறை
அமைச்சர் முனுசாமி தெரிவித்தார்.
கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் மாதம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய நிர்ணய குழு கூட்டத்தில், திறந்தவெளி பல்கலையில், பட்டப்படிப்பு சம்மந்தமாக, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, எஸ்.எஸ்.எல்.ஸி.,க்கு பின், மூன்றாண்டு பட்டயப்படிப்பு (டிப்ளமோ) படித்து, பின்னர், திறந்தவெளி பல்கலை மற்றும் கல்லூரி மூலம் பட்டப்படிப்பு படித்தால், எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 படித்த பின் இளங்கலை பட்டப்படிப்பு படிப்பதற்கு இணையானதாக கருதப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதுபோல், ப்ளஸ் 1க்கு பின் (ஓல்டு எஸ்.எஸ்.எல்.ஸி.,), இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்து, அதன்பின் திறந்வெளி பல்கலையில், பட்டப்படிப்பு படித்தால், இளங்கலை பட்டப்படிப்பு இணையாக கருதப்படும்.
எஸ்.எஸ்.எல்.ஸி.,க்கு பின், ஐ.டி.ஐ., படித்து, அதன்பின் திறந்தவெளி பல்கலை மூலம் பட்டப்படிப்பு படித்திருந்தாலும், பட்டப்படிப்பு இணையாக கருதி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வுக்கு அங்கீகரிக்கப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்த அரசாணையும், 2012ம் ஆண்டு, டிசம்பர், 18ம் தேதி வெளியிடப்பட்டது.
இச்சூழலில், அமைச்சர் முனுசாமி, "திறந்தவெளி பல்கலையில் பட்டப்படிப்பு படிப்போருக்கு, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு அளிக்க முடியாது" என, கூறியிருப்பது, திறந்தவெளி பல்கலையில், பட்டப்படிப்பு முடித்தோர் மற்றும் பட்டப்படிப்போர் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...