Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பெற்றோர்களின் கவனத்திற்கு : ஒரு ஆரம்பப் பள்ளி குழந்தையின் கட்டுரை



           ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார் தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்", என விரும்புகிறீர்கள் ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார்.  
அதை கண்ட அவர் கணவர் என்ன ஆச்சு ஏன் அழுகிறாய் என்றார்

என் மாணவன் எழுதிய இந்த கட்டுரையை படித்து பாருங்கள் என்று கொடுத்தார் அதில்

கடவுளே என்னை என் வீட்டில் இருக்கும் டிவியை போல் ஆக்கிவிடு நான் அதன் இடத்தை பிடிக்க வேண்டும்.அதை போல் வாழ வேண்டும்
எனக்கான இடம், என்னை சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர்

நான் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சை கவனமாக கேட்க வேண்டும்,அவர்களின் கவனம் என்னை சுற்றியே இருக்க வேண்டும்.தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்பு கவனத்தை போல் நானும் பெற வேண்டும்
அப்பா வேலை முடித்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும்.அவர் களைப்பாக இருந்தால் கூட அப்புறம் அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்பவேண்டும் என்னை விளக்க கூடாது

என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும் சண்டையிடவேண்டும்
என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும்

கடைசியாக ஒன்று நான் என் குடும்ப்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும்

என் இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை.நான் டிவியை போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்

இதை படித்துவிட்டு கணவர் சொன்னார் அந்த குழந்தை பாவம் என்ன பெற்றோர் இவர்கள் குழந்தையை கவனிக்காமல் என்ன ஜென்மமோ

ஆசிரியை தன் கணவரிடம் கூறினார் இந்த கட்டுரையை எழுதியது நம் மகன்

பெற்றோர்களே டீவீக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நம் குடும்ப உறவுகளை தூரமாக்கி விடாதீர்கள்

டிவியில் வரும் சில ப்ரோக்ராம்கள் கூட குழந்தைகளிடம் எதிமறையான விளைவுகளை ஏற்படுத்த கூடியவைகளாகவே பெரும்பாலும் இப்பொழுது உள்ளன

எனவே பொன்னான நேரத்தை சிறிது குடும்பத்தினருடன் செலவிட பலக்கபடுத்திகொள்ளுங்கள்.


"நம்மில் பலர் தெரிந்தோ (அ) தெரியாமலோ இத்தவறுகள் செய்கிறோம், இனியாவது இத்தவறுகளை திருத்திக்கொள்ளவிடில் இச்செயல்கள் நம் குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும்மில்லை".




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive