காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறைகளில் அன்னிய
நேரடி முதலீட்டு (எஃப்.டி.ஐ) வரம்பு விரைவில் அதிகரிக்கப்படும் என்று
மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மசோதா
2008-ம் ஆண்டிலிருந்து மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில் அவர்
இத்தகவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விமான போக்குவரத்து, சில்லறை வர்த்தகம் மற்றும்
பன்முக இலச்சினை கொண்ட தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை அனுமதிப்பதில்
உள்ள வரம்பு மேலும் தளர்த்தப்படும். இதேபோல காப்பீடு மற்றும் ஓய்வூதியத்
துறைகளில் முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்படும் என அவர் நம்பிக்கையுடன்
தெரிவித்தார்.
மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் காப்பீட்டுத் துறையில் அன்னிய நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர வாய்ப்பு உள்ளது. சாலை மற்றும் நிலக்கரி துறைகளில் சுயச் சார்புள்ள கட்டுப்பாட்டு ஆணையம் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றார் சிதம்பரம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...