Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உண்மைத் தன்மைச் சான்று பெற அசல் பட்டச் சான்றை மட்டுமே அனுப்ப வேண்டும் - கல்வியியல் பல்கலை

         ஆசிரியர்கள் பயின்ற உயர்கல்வியைப் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் ஊக்க ஊதிய உயர்வு சுதந்தரித்து வழங்கவும் பதவி உயர்வுக்குத் தகுதிவாய்ந்தோர் பட்டியலில் சேர்க்கவும் உயர்கல்விச் சான்றுகளின் உண்மைத்தன்மை அறியும் பொருட்டு அவற்றின் நகல்கள் (Xerox) சார்ந்த
பல்கலைக்கழகங்களுக்கு தொடக்கக் கல்வித்துறை எனில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராலும் பள்ளிக் கல்வித் துறை எனில் தலைமையாசிரியராலும் அனுப்பப்பட்டு மெய்த்தன்மைச் சான்று (Genuinneness) பெறுவது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் உள்ளது.
 
           கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படித்தோரின் சான்றை தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய போது "அசல் பட்டச் சான்றையும் அசல் மதிப்பெண் பட்டியலையும் அனுப்பினால் தான் மெய்த்தன்மைச் சான்று வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டு பல்கலைக் கழகத்திலிருந்து கடிதம் திருப்பப்பட்டுள்ளது. எனவே இனிமேல் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்திற்கு உண்மைத்தன்மைச் சான்று கோரி அனுப்பும் போது அசல் சான்றிதழ்களை அனுப்பினால் கால விரயமும் கூடுதல் அஞ்சல் செலவும் தவிர்க்கப்படலாம்.
 
              உண்மைத் தன்மைச் சான்று பெறப் பல்கலைக் கழகத்தால் நிர்ணயிக்கப்படும் கட்டணம் வரைவோலையாகச் செலுத்தப்பட வேண்டும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் (அஞ்சல்வழி/கல்லூரி) பயின்றுள்ள அரசுப்பணியாளர்கள் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்விச் சான்றுக்கு உண்மைத்தன்மை அறிய எவ்விதக் கட்டணமும் இல்லை.
THANKS : TESTF




7 Comments:

  1. What is DD amount for education university

    ReplyDelete
  2. உண்மைத்தன்மை அறிய அசல் சான்றிதழின் நகலை அனுப்பும்போது, அஞ்சல் செலவு, கால விரயம் ஆகியவை தவிர்க்கப்படலாம் என்பது பாராட்டுக்குரியது. ஆனால் அசல் சான்றிதழை அனுப்பும்போது அது எங்கேனும் தவறிவிட்டால் என்ன செய்வது...?

    ReplyDelete
  3. சிந்திக்க வேண்டிய செய்திதான். ஆனால் ரிஸ்க் எடுத்துத்தான் ஆகவேண்டும்.அதற்கும் தயாராவோம்.

    ReplyDelete
  4. கல்வியியல் கல்லூரிக்கு கட்டணம் எவ்வளவு

    ReplyDelete
  5. CHARGE IS RS.375. I SENT MY ORIGINAL CERTIFICATES AND I GOT WITH IN TWENTY DAYS. IT IS TOO SAFE

    ReplyDelete
  6. I AM PAID RS.375 AND TAX RS.25 TOTALLY RS.400

    ReplyDelete
  7. சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய பல்வேறு பல்கலைகழகங்களுக்கு அனுப்பும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றின் விபரங்களை விரிவாக அறிந்து கொள்ளும் வகையில் தங்களின் முகப்பு பக்கத்தில் நிறந்தரமாக ஒரு இடுக்கை அமைத்து வெளியிட அன்புடன் வேண்டுகிறோம், எங்களை போன்ற புதிதாக இணைந்துள்ள இனி இணைய உள்ள ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive