பள்ளி கல்வித் துறையில், முதுகலை, தாவரவியல் ஆசிரியர், 196 பேர் மற்றும்
இளநிலை உதவியாளர்கள் 310 பேர் பணி நியமன கலந்தாய்வு, நாளை (27ம்தேதி),
"ஆன்-லைன்" மூலம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில்
நடக்கிறது.
அதன்படி, தேர்வு செய்யப்பட்ட, 196, முதுகலை தாவரவியல் ஆசிரியர்களை, பணி
நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலகங்களிலும், "ஆன்-லைன்" வழியில் நடக்கிறது.
இதேபோல் டி.என்.பி.எஸ்.சி., மூலம், கல்வித்துறைக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்ட, 310, இளநிலை உதவியாளர்களை, பணி நியமனம் செய்வதற்கான
கலந்தாய்வும், நாளை, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.
சம்பந்தபட்டவர்கள், நாளை காலை, 9:00 மணிக்கு, முதன்மைக் கல்வி
அலுவலகங்களுக்கு சென்று, கலந்தாய்வில் கலந்துகொண்டு, பணி நியமன உத்தரவுகளை
பெற்றுக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., அனுப்பிய தேர்வுக்
கடிதத்தை, கலந்தாய்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், இயக்குனர்
கேட்டுக் கொண்டுள்ளார்.
Why did trb call 6000 candidates for only 3000 posts.plse tell reason for that.
ReplyDelete