"சுமையாக கருதாமல், விருப்பமுடன் படித்ததால்
ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதிக்க முடிந்தது,' என, அகில இந்திய அளவில், 7வது
இடத்தில் வெற்றி பெற்ற மதுரை டாக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார்.
மதுரை மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த
ஓய்வுபெற்ற பாங்க் ஆப் இந்தியா மேலாளர் தங்கராஜ் குணாளன். மனைவி வசந்தி.
இவர்களது மகன் பிரபுசங்கர், 29. இவர், டி.வி.எஸ்., லட்சுமி மெட்ரிக்
பள்ளியில், 1 முதல், 12ம் வகுப்பு வரை படித்தார். 2000ல் பிளஸ் 2 தேர்வில்,
1,157 மதிப்பெண்கள் பெற்றார்.
பின், மதுரை மருத்துவக்கல்லூரியில், 2005ல் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றார். சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்., நிறுவனத்தில், எம்.டி., பட்டம் பெற்றார். பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சங்க தலைவராக திகழ்ந்தார். தற்போது, சென்னை செட்டிநாடு மருத்துவ கல்லூரியில், உதவி பேராசிரியராக பணிபுரிகிறார்.
இவருக்கும், டாக்டர் நவீனா என்பவருக்கும், கடந்தாண்டு திருமணம் நடந்தது. நவீனா, நெல்லை மருத்துவ கல்லூரியில் எம்.எஸ்., படிக்கிறார். இரண்டாவது முறையாக, ஐ.ஏ.எஸ்., தேர்வை எழுதிய பிரபுசங்கர், அகில இந்திய அளவில், 7வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதுகுறித்து பிரபுசங்கர் கூறியதாவது: சிறிய வயதிலிருந்து, ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என, ஆசை இருந்தது. கடந்த முறை, தேர்வு எழுதி வெற்றி பெற முடியவில்லை. இந்தாண்டு புவியியல், வரலாறு பாடங்களை தேர்வு செய்து படித்தேன்.
படிப்பதை சுமையாக கருதாமல், விருப்பத்துடன் படித்ததால், சாதிக்க முடிந்தது.சென்னை "சத்யா கோச்சிங்" சென்டரில் சர்ந்தேன். பணி காரணமாக தொடர்ந்து செல்ல முடியவில்லை. தினமும், "தினமலர்" நாளிதழ் படித்து பொது அறிவை வளர்த்து கொண்டேன். ஆர்வம் இருந்தால் சாதிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...