பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால்,
திண்டுக்கல்லில் மாணவி தற்கொலை செய்து கொண்டார். பத்தாம் வகுப்பில்
மதிப்பெண் குறையும் என்ற பயத்தில், ஒரு மாணவி தலைமறைவானார்.
திண்டுக்கல் காளிமுத்துப்பிள்ளை தெருவை
சேர்ந்தவர் சண்முகவள்ளி, 19. பிளஸ் 2 தேர்வில் 640 மதிப்பெண் எடுத்து
வெற்றி பெற்றார்; குறைந்த மதிப்பெண் எடுத்ததால், விஷம் குடித்து தற்கொலை
செய்து கொண்டார்.
கம்பிளியம்பட்டியை சேர்ந்த, பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், பொதுதேர்வு எழுதியுள்ளார். "தேர்வில் மதிப்பெண் குறைந்து விடும்" என பெற்றோரிடம் கூறிய இவர், சில நாட்களுக்கு முன் தலைமறைவானார்.
குறைந்த மதிப்பெண், தேர்வில் தோல்வி என, மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எதிர்கால வாழ்க்கையின் முக்கிய பகுதி தேர்வு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இதற்காக உயிரை மாய்ப்பது என்ன நியாயம்.
இதுகுறித்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனை, மனநல நிபுணர் மகாலட்சுமி கூறுகையில், "ஒரு மாணவரின் வாழ்க்கையை, தேர்வு முடிவு நிர்ணயிப்பதில்லை; தற்கொலை மற்றும் மனமுறிவு தேவையில்லை. மதிப்பெண் குறைவுக்கும், அறிவுக்கும் சம்பந்தமில்லை. எண்ணம் தெளிவாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். மாணவர்கள், தங்கள் மீது நம்பிக்கை வைக்க கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...