ஆசிரியர்
கலந்தாய்வின்போது, அரசாணை எண்.16ன் படி, புதிதாக உருவாக்கப்பட்ட
பணியிடங்களையும் சேர்க்க வேண்டும், என முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, அந்தந்த மாவட்டத்துக்குள் 22ம்
தேதியும், வெளி மாவட்டங்களுக்கு 23ம் தேதியும் நடக்க உள்ளது. மேல்நிலை
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.
இதனால், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலை தலைமை ஆசிரியராக பதவி
உயர்வு பெறும்போது, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலி இடங்கள்
ஏற்படும். தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட காலி பணியிடம் உருவாக
வாய்ப்புள்ளது.
பதவி உயர்வு மூலமாக ஏற்படும் இந்த காலிப்பணியிடங்களில்,
மாறுதல் பெறும்போது, பல்வேறு முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால், தலைமை
ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திய பின்னர், முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்திட ஆசிரியர்கள் கோரிக்கை
விடுத்து, பள்ளிக்கல்வித்துறைக்கு "பேக்ஸ்' அனுப்பியுள்ளனர்.
மேலும்,
அரசாணை 16ன்படி 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன. கலந்தாய்வின்போது, இந்த பணியிடங்களையும் சேர்க்க
வேண்டும், எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக
மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கூறும்போது: அனைத்து ஆசிரியர்களும்
முழுமையாக பயனடையும் வகையில், தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பின்னர்,
பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட
பணியிடங்களையும் கலந்தாய்வின்போது காட்ட வேண்டும், என தமிழக முதல்வர்,
கல்வித்துறை இயக்குனர் ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...