அண்ணாமலை பல்கலைக்கழகத்தை போல, பச்சையப்பன் அறக்கட்டளையையும் அரசு ஏற்று நடத்த வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர், மதுரவாயலில் உள்ள கண்ணன் நகர் உள்ளிட்ட பல
இடங்களில் உள்ள சொத்து விவரங்கள், இதுவரை கிடைக்கவில்லை. கோடிக்கணக்கான
சொத்துகள் குவிந்து கிடக்கும், பச்சையப்பன் அறக்கட்டளையின் அறங்காவலராக,
ஐந்து ஆண்டுகள் பதவியில் நிர்வாகிகளாக இருந்து விட்டால், கோடீஸ்வரர்
ஆகிவிடலாம் என்ற நிலை இருப்பதால், இப்பதவியை பிடிப்பதற்கு பலர் ஆர்வம்
காட்டுவதாக கூறப்படுகிறது.
அறங்காவலர் பொறுப்பில் இருந்தவர்களும், பண நோக்கம் கொண்டவர்களாக
இருந்ததால், ஒன்பது பேரில், கருத்து வேறுபாடுகள் காரணமாக, ஐந்து பேர்
அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், கல்லூரிகளில் வளர்ச்சி
பணிகள் அனைத்தும் முடங்கின.
நான்கு பேர் மட்டுமே அறங்காவலராக இருந்த காரணத்தால், பெரும்பான்மை
இல்லாததால், சிறப்பு அதிகாரியாக, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்,
டி.என்.சேஷனை, ஐகோர்ட் நியமித்தது. இவர், "பச்யைப்பன் அறக்கட்டளை தேர்தலை
நடத்துவார் என்றும், ஆசிரியர், ஆசிரியரல்லாதோர் காலி பணியிடங்களை
நிரப்புவார்" எனவும் தெரிவித்தது.
ஐந்து அறங்காவலர் பணியிடங்களுக்கான தேர்தல், பலத்த போலீஸ்
பாதுகாப்புடன், நேற்று முன்தினம் நடந்தது. இது குறித்து, பெயர் வெளியிட
விரும்பாத பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:
அறக்கட்டளைக்கு, நிர்வாகிகள் மாறி மாறி வந்தாலும், கல்வி நிறுவனங்களின்
வளர்ச்சிக்கு பாடுபடாமல், சொத்துகளை சுரண்டுவதில் மட்டுமே, கண்ணும்
கருத்துமாக உள்ளனர். ஐகோர்ட் வழக்குகளால், கல்லூரிகளில் காலியாக உள்ள
ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்பப்படவில்லை.
மீண்டும் அறக்கட்டளை, அறங்காவலர் கையில் மாறினால், மறுபடியும், ஊழலுக்கு
மட்டுமே வழிவகுக்கும். எனவே, அண்ணாமலை பல்கலைக் கழகத்தை போல, பச்சையப்பன்
அறக்கட்டளையை, அரசே ஏற்று நடத்த வேண்டும். அப்போது தான், அறக்கட்டளை
சொத்துகள் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...