"திறமை என்பதை வெறும் கல்வியால் மட்டும்
அடைந்து விடமுடியாது. பல அம்சங்களை கொண்ட பயிற்சினால் மட்டுமே
அடையமுடியும்," என அண்ணா பல்கலை பதிவாளர் பேசினார்.
கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில், 8வது
பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக அண்ணா
பல்கலை பதிவாளர் சிவநேசன் பங்கேற்று, 267 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள்
வழங்கி பாராட்டினர். பின் அவர் பேசியதாவது:
பட்டம் பெறும் மாணவர்களுக்கு இது ஒரு முக்கியமான நாள். பல்கலை அளவில் முன் வரிசை பெற்ற, நான்கு மாணவர்களுடன், 267 மாணவ, மாணவிகள் இங்கு பட்டம் பெறுகின்றனர். இவர்களை சிறப்பாக பயன்படுத்தி, உருவாக்கி உள்ளதுக்கு கல்லூரி நிர்வாகம் மற்றும் அதன் விரிவுரையாளர்களும் பெருமை கொள்ளவேண்டும்.
நல்ல சமுதாயத்தை, நாம் நினைக்கும்படி உருவாக்க ஏதுவாக கல்வி கற்பிக்கப்பட வேண்டும். மனித மேம்பாடு மற்றும் சமன்பாடு ஆகியவற்றின் மதிப்பில், ஒரு புதிய நவீன ஜனநாயகத்தை உருவாக்க, நாம் உழைத்து வருகிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில், நல்ல கல்வி சேவை இத்தருணத்தில் தேவைப்படுகிறது.
திறமை என்பதை வெறும் கல்வியினால் மட்டும் அடைந்து விடமுடியாது. அது படிப்பு, கவனம், காரணம் கொள்ளுதல் உள்பட பல அம்சங்களை கொண்ட பயிற்சியினால் மட்டுமே அடைய முடியும். பயிற்சி என்பது செய்வதன் மூலம் அறிவதாகும். செய்வதற்காக படிப்பதல்ல.
இங்கு பட்டம் பெறும் மாணர்கள் தங்களிடம் உள்ளடங்கி உள்ள திறமைகளை வெளிக்கொணர்ந்து, நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை சமாளிக்க தோள் கொடுக்க வேண்டும்.
நுண்ணறிவு தீயவை எது, நல்லது எது என்பதை வேறுபடுத்தி அறிய உதவும். நேர்மை, கடமை போன்றவையுடன் நுண்ணறிவை சேர்க்கும் போது, சிறந்த வாழ்க்கை எற்படுத்தப்படும்.
மாணவர்கள் புதியனவற்றை தெரிந்து கொள்ளவும், ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும் ஆர்வம் காட்டவேண்டும். விரைவான உறுதியான முடிவுகளை எடுக்க, தன்னைத்தானே வளர்த்து கொள்ளவேண்டும். இவைகளை மாணவர்கள் அடையும்போது, நல்லவர் என்பதிலிருந்து, வெற்றி பெற்ற மனிதராக மாறுவதை உணரமுடியும்.
எந்த வேலைக்கு சென்றாலும் சரி, முழு மனதையும் அதன் மேல் செலுத்தினால், கட்டாயம் வெற்றியாளனாக வலம் வரமுடியும். எந்த வேலையையும் நேசிக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...