பூமியைப் போல், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற, இரண்டு கோள்களைக்
கண்டுபிடித்தவர், தமிழகத்தைச் சேர்ந்த, விண்வெளி மற்றும் ஏவுகணை
தொழில்நுட்ப விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை.
சூரிய குடும்பத்தைச் சேராத இந்த, இரண்டு கோள்களும், எளிதில் சென்று வரக்
கூடிய, 122 ஒளி ஆண்டு தூரத்தில் தான் இருக்கிறது எனத் தெரிவித்து,
இந்தியர்களின் விண்வெளிப் பயணப் பசியைத் தூண்டி உள்ளார்,
சிவதாணுப்பிள்ளை.இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ள,
"பிரம்மோஸ்&' ஏவுகணையின் தந்தை&' என, போற்றப்படும் இவர், பிற
முக்கிய ஏவுகணைகளான, அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் தயாரிப்பிலும்
குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி உள்ளார்.
இந்திய விண்வெளி உலகின் முன்னணியாளர்களாகக் கருதப்படும், விக்ரம்
சாராபாய், சதிஷ் தவான், அப்துல் கலாம் போன்றவர்களுடன் இணைந்து, சில காலம்
பணியாற்றியுள்ள சிவதாணுப்பிள்ளைக்கு, சில நாட்களுக்கு முன், ஜனாதிபதி,
பிரணாப் முகர்ஜி, "பத்மபூஷண்&' விருது வழங்கி கவுரவித்தார்.
அதற்கு முன், "பத்மஸ்ரீ&' மற்றும் விக்ரம்சாராபாய் ஆராய்ச்சி விருது
போன்ற விருதுகளையும், பல கவுரவங்களையும் பெற்றுள்ள சிவதாணுப்பிள்ளை,
1991ல் இருந்து, ஏவுகணை தயாரிப்பு தொழில்நுட்பத்தில் தன்னை முழுமையாக
ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
"பிரம்மோஸ்&' ஏவுகணைகள், ரஷ்யாவின் ஒத்துழைப்புடன்
தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின், "பிரம்மபுத்ரா&', ரஷ்யாவின்,
"மாஸ்கோவ்&' நதிகளின் பெயர்களை இணைத்து, "பிரம்மோஸ்&' என்ற பெயரில்
உருவாக்கப்படும் இந்த ஏவுகணைகள், உலக அளவில் இந்தியாவின் ஏவுகணை திறனை
வெளிக்காட்டி உள்ளன.
அமெரிக்காவுக்கும், ஈராக்குக்கும் இடையேயான, வளைகுடா போருக்குப் பிறகு
தான், போர் ஏவுகணைகள் தயாரிக்க வேண்டும் என்ற உத்வேகம், மத்திய அரசுக்கு
ஏற்பட்டு உள்ளது. அதற்கு, "பிரம்மோஸ்&' என்ற பெயரில், உருவம்
கொடுத்தவர் சிவதாணுப்பிள்ளை என்றால் மிகையில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...