நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்,
இன்று (மே 4) முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் பொறியியல் இடங்கள்
இருப்பதாக அண்ணா பல்கலை துணைவேந்தர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
அதிலும், மருத்துவப் படிப்பிற்கு, "சீட்" கிடைக்கும் மாணவர்கள் கூட,
கடைசி நேரத்தில், பொறியியல் கலந்தாய்வுக்கு வந்து விடுகின்றனர்.முன்னணி
கல்லூரியில் படிப்பை முடித்தால், கைமேல் வேலை, கை நிறைய சம்பளம் என்ற நிலை
இருப்பதால், மாணவர்கள், பொறியியல் படிப்பை, அதிகளவில் தேர்வு செய்கின்றனர்.
கடந்த ஆண்டு நிலை: கடந்த ஆண்டு, பொதுக் கல்வி
பிரிவில், 1.74 லட்சம் விண்ணப்பங்கள், தொழிற்கல்வி பிரிவில், 6,000
விண்ணப்பங்கள் என, 1.8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசு
ஒதுக்கீட்டின் கீழ், 1.75 லட்சம் இடங்கள் இருந்தன. 40 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட இடங்கள், கடைசி வரை நிரம்பவில்லை.
இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 2 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த
ஆண்டை விட, அதிக மாணவ, மாணவியர் விண்ணப்பிப்பர் என, அண்ணாபல்கலை
எதிர்பார்க்கிறது. எனவே, 2.5 லட்சம் விண்ணப்பங்களை
அச்சிட்டுள்ளது.சென்னையில் 4 இடங்களில் படிவம் விற்பனை செய்யப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக வளாகம், குரோம்பேட்டை, ஐ.எம்.ஐ.டி., புரசைவாக்கம் அரசு
பாலிடெக்னிக், பிராட்வே பாரதி அரசு பெண்கள் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தில்
59 மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 2 1/2 லட்சம்
விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
விண்ணப்பத்தின் விலை ரூ.500. எஸ்.சி., எஸ்.சி (அருந்ததி), எஸ்.டி.
பிரிவினருக்கு ரூ.250 சலுகை விலையில் வழங்கப்படுகிறது. சலுகை விலையில்
பெறத் தகுதியுடையவர்கள் அதற்கான ஜாதி சான்றிதழ்களின் நகல் கொடுக்க
வேண்டும். தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் ரூ.700-க்கு வரைவு
காசோலை எடுக்க வேண்டும். "செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை அண்ணா
பல்கலைக்கழகம், சென்னை-600025" என்ற முகவரிக்கு காசேலை எடுக்க வேண்டும்.
விண்ணப்பம் வழங்கும் இடங்கள் மற்றும் சேர்க்கை அட்டவணை தொடர்பான விவரங்கள் அனைத்தையும், www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...