சரோஜினி நாயுடு நினைவு பரிசை பெற பெண்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரை வெளிவந்த படைப்பாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் இருந்து 3 பேர் பரி” பெற்றுள்ளனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து பரிசு பெறுவதற்கான கட்டுரைகள் ஏதும் வெளிவரவில்லை. அதனால் பத்திரிகையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்டம் தோறும் பத்திரிகை நிருபர்களை சந்தித்து பரிசுத் திட்டத்தின் நோக்கம் பற்றி விரிவாக எடுத்துக் கூறி வருகிறோம். இதற்காக தமிழகம் முழவதும் ஏக்தா, தீப்ஸ், சீமா, வெளிச்சம், சீட்ஸ் ஆகிய தொண்டு நிறுவனங்கள் அந்தந்த மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். இக்கட்டுரைகள் 2012ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி முதல் வரும் ஜூன் 15ம் வரை வெளியான கட்டுரைகள் இந்தச் சிறப்பு திட்டத்தில் இடம் பெறுகின்றன. அவ்வாறு வெளி வந்துள்ள கட்டுரைகளை வரும் ஜூன் 15ம் தேதிக்குள் நெ.53-ஏ, சர்ச் தெரு, தங்கம் காலனி, அண்ணா நகர் (மேற்கு) சென்னை 40 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைக்கு சரோஜினி நாயுடு நினைவு பரிசாக 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு காயத்ரி கூறினா
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...