இன்று (மே 24) நடப்பதாக இருந்த ஆசிரியர்கள்
பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான "கவுன்சிலிங்', தேதி
குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
மே 24 மற்றும் 25ல் முதுகலை
ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான
"கவுன்சிலிங்' நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், பின் ஒத்திவைப்பதாக தகவல் வெளியானது.
அதிகாரபூர்வ தகவல் இல்லாததால் இன்று (வெள்ளி) "கவுன்சிலிங்' நடக்குமா
இல்லையா என்று நேற்று இரவு வரை ஆசிரியர்களிடையே குழப்பம் நீடித்தது.
முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி கூறுகையில், ""உயர்நிலை பள்ளித் தலைமை
ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர் பணிமாறுதல்
மற்றும் பதவி உயர்வு, சிறப்பாசிரியர் பணிமாறுதல் ஆகிய "கவுன்சிலிங்'
நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...