"மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளின் இடவசதி அமைவிடம் குறித்து
தமிழக அரசு வரையறை செய்ய வேண்டும்" என மதுரையில் நேற்று நடந்த தென் மாவட்ட
தனியார் பள்ளிகளுக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த விதிகளை கடைபிடிக்க முடியாமல் 800 தனியார் பள்ளிகள் அங்கீகாரம்
பெறாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக, தமிழக அரசு அமைத்த குழு மதுரையில் 3வது
கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியது. குழுத் தலைவர் பள்ளிக் கல்வி
இயக்குனர் தேவராஜன் தலைமை வகித்தார்.
தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் தெரிவித்ததாவது: மாணவர் ஒருவருக்கு
ஒரு பள்ளியில் 10 சதுரடி இடவசதி செய்ய வேண்டும் என விதி உள்ளது. பள்ளியில்
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைவிட அளவை வரையறை செய்ய வேண்டும். நேஷனல்
பில்டிங் கோடு (என்.பி.சி.,) பரிந்துரையை ஏற்று, 3.5 கிரவுண்ட் என
குறைந்தபட்ச இடவசதியை நிர்ணயிக்க வேண்டும்.
சிட்டிபாபு கமிட்டி பரிந்துரைப்படி நில அளவு குறைந்த பள்ளிகளில் அருகில்
உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பொது இடங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
பள்ளிகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும்.
சம்பத் கமிட்டி பரிந்துரையை ஏற்று, இரு தளங்களில் மட்டுமே பள்ளிகள்
இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கி, தக்க ஆய்வுக்கு பின் தளங்கள்
அதிகம் உள்ள கட்டடத்தின் பள்ளிகள் இயங்க அனுமதிக்க வேண்டும், என்றனர்.
இயக்குனர் தேவராஜன் பேசியதாவது: கூட்டத்தில் தெரிவிக்கப்படும்
கருத்துகள் அரசுக்கு அறிக்கையாக வழங்கப்படும். இடஅமைவிடம் குறித்த முடிவை
அரசு பின் அறிவிக்கும், என்றார்.
இணை இயக்குனர்கள் லதா(தொடக்க கல்வி துறை), செல்லம்(கள்ளர் பள்ளி),
சி.இ.ஓ., அமுதவல்லி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயமீனாள் தேவி, மெட்ரிக் பள்ளி
ஆய்வாளர் எமரல்சி, உடற்கல்வி ஆய்வாளர் பரமேஸ்வரி பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...