"கற்றுக் கொள்ளும் இடமாக மட்டும் இல்லாமல், பார்வையாளர்கள் கவலைகளை
மறந்து ஆசுவாசப்படுத்தி கொள்ளும் இடமாகவும், அருங்காட்சியகங்கள் இருக்க
வேண்டும்," என, மத்திய கலாச்சார அமைச்சர் சந்தரேஷ் குமாரி கடோச்
தெரிவித்தார்.
அருங்காட்சியங்கள் மூலம் நம் நாட்டின் கலாச்சாரத்தையும்,
பண்பாட்டையும், வரலாற்றையும் அறிந்து கொள்கிறோம். அதே சமயம்,
அருங்காட்சியங்கள் கற்றுக் கொள்ளும் இடமாக மட்டும் இல்லாமல், இங்கு வரும்
பார்வையாளர்களுக்கும், அவர்களுடன் வரும் முதியவர்களுக்கும், கவலைகளை மறந்து
ஆசுவாசப்படுத்தி கொள்ளும் இடமாக இருக்க வேண்டும்.
அருங்காட்சியகங்களுக்கு வரும் இளம் வயதினருக்கு,
மகிழ்ச்சியை ஏற்படுத்தும் களமாக இருக்க வேண்டும். அருங்காட்சியகங்கள் நம்
சமுதாயத்தில் எத்தகையை பங்கை வகிக்கிறது என்பதை இளைஞர்கள் மத்தியில்
விழிப்புணர்வு ஏற்படுத்துவதே, இந்த பயிற்சியின் நோக்கம்.
அருங்காட்சியங்கள் வசூலிக்கும் நுழைவு கட்டணம் மற்றும்
பார்க்கிங் கட்டணங்களில் 50 சதவீதம் அதன் பராமரிப்புக்கே திருப்பி
வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...