நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் மனித வளம் ஆற்றலை
மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது என்று தமிழக ஆளுநர்
கே.ரோசய்யா கூறினார்.
சென்னையை அடுத்த கெüரிவாக்கம் நியூபிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல்
கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் பட்டமளிப்பு விழாவில் அவர்
பேசியது:
மாணவர்களுக்கு அறிவுசார் கல்வி வழங்கி, அவர்களது அறிவாற்றலை
மேம்படுத்தும் பணியை பல்கலைக்கழகங்களும், உயர்கல்வி நிறுவனங்களும்
சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. அதற்கு உறுதுணையாகத் திகழ்ந்து வரும் ஆசிரியர்களின் சேவை என்றென்றும் பாராட்டுக்குரியது.
மாணவர்கள் தங்களது தனித்திறனை மேம்படுத்திக்
கொள்வது அவசியம் என்றார். விழாவில் 176 மாணவர்களுக்கு பட்டங்கள்
வழங்கப்பட்டன. தஞ்சை தமிழ்
பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், கல்லூரி தலைவர்
கே.லோகநாதன், செயலர் வி.எஸ்.மகாலட்சுமி, இயக்குநர் ஏ.சுவாமிநாதன், முதல்வர்
வி.கனகசபை, ஆந்திர மகிளா காங்கிரஸ் தலைவர் ஏ.சுனிலா பிரதாப், பேராசிரியர்
ரகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...