Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரஷ்யாவில் தமிழைக் கௌரவித்த ரஷ்ய அதிபர் மாளிகை!


              Great Kremlin Palace, Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை"(ரஷ்ய அதிபர் மாளிகை) தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ அவமானமாகப் பார்க்கும் நிலை இன்றுள்ள தமிழர்களிடையே பரவியுள்ளது. நம் மொழியை நாம் பேசவே தயங்குகிறோம் அந்த அளவுக்குப் போய்விட்டது நம் மொழி. ஆனால், Great Kremlin Palace, Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை"(ரஷ்ய அதிபர் மாளிகை)
 
             தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கௌரவிக்கிறது, கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

               தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.

                       உலகில் 6 மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சம்ஸ்கிருதம். இந்த 6 மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி, எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக தமிழ்மொழி தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை' எனத் தமிழில் எழுதினோம்'' என்று கூறுகிறார்கள். மேலும், அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களுள் நமது திருக்குறளும் ஒன்று.

               வெளிநாட்டில் உள்ளவர்களுக்குக் கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. ஆனால், நாமோ தமிழைக் காப்பாற்ற கருத்தரங்கு நடத்திக் கொண்டிருக்கிறோம் தமிழராக பிறந்து தமிழ் பேசத் தயங்கும் தமிழர்கள், வியாபார நிலையங்களில் தமிழ் பெயரை பொறிக்க தயங்கி ஆங்கிலத்தில் வைத்திருக்கும் தமிழர்கள் இனியாவது தமிழ்மொழியின் அருமை பெருமையை உணர்ந்தால் சரி!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive