புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள்
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக அரசு கருவூலக் கணக்குத்துறையில் அரசு
ஊழியர்களுக்கான சம்ப ளம் வழங்குவதற்கு தானி யங்கி பட்டியல் ஒப்பளிப்பு
முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாத இறுதி நாளிலேயே ஊழியர்கள் சம்பளம் பெற்று
வந்த நிலையில், இப்புதிய முறையால் ஒரு வாரகாலம் வரை சில ஊழியர்கள் சம்பளம்
பெற முடியாத நிலை ஏற்பட்டுள் ளது.இம்முறையில் தேவை யான மாற்றம் செய்து
அனைத்து ஊழியர்களுக் கும் உரிய காலத்தில் பணப் பலன்கள் கிடைக்க நட வடிக்கை
எடுக்க வலியுறுத்தி யும், அதுவரை தானியங்கி பட்டியல் ஒப்பளிப்பு முறை யை
தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடை
பெற்றது.புதுக்கோட்டை மாவட் டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பொது
அலுவலக வளாகம் மற்றும் அனைத்து வட்டத் தலைநக ரங்களிலும் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு
அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கி. ஜெயபாலன் தலைமை வகித்தார்.
கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செய லாளர் சி.கோவிந்தசாமி, ஊரக
வளர்ச்சித்துறை சார் பில் தி.நடராஜன், சமூக நலத்துறை சார்பில் ஆர்.
ரெங்கசாமி, வருவாய்த் துறை சார்ப்பில் பெரிய சாமி, நில அளவைத்துறை சார்பில்
வெள்ளைச்சாமி, மகளிர் துணைக்குழு ஒருங் கிணைப்பாளர் இந்திரா உள்ளிட்டோர்
பேசினர். கரூர்கரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற
ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.மோகன்குமார் தலைமை
வகித்தார். மாவட் டச் செயலாளர் எம்.சுப்பிர மணியன் கோரிக்கைகளை விளக்கி
சிறப்புரையாற்றி னார். துறைவாரி சங்கங் களின் தலைவர்கள் கார்த்தி கேயன்,
மாதவன், பழ.நாக ராஜன், து.ராகராஜன், ராஜேந்திரன், குழந்தை வேலு, சந்திரன்,
விஜயக் குமார், செல்லமுத்து, பால கிருஷ்ணன், நாராயணன், இளங்கோவன், கண்ண
தாசன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...