ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், சர்தேச தமிழ்
ஆராய்ச்சி சங்கத்தின் முன்னாள் தலைவர், நொபொரு கராஷிமாவுக்கு, பத்ம ஸ்ரீ
விருது வழங்கி கவுரவித்தார்.
ஜப்பானின், டோக்கியோ பல்கலை கழக பேராசிரியர் நொபொரு கராஷிமா,80. இவர்
தென்னிந்திய வரலாறு குறித்து ஆய்வு செய்தவர். இதற்காக சென்னை
பல்கலைகழகத்தில், கல்வெட்டு குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
நன்றாக தமிழ் பேசக்கூடிய கராஷிமா, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்க
தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தமிழுக்கு இவர் ஆற்றிய சேவையை
பாராட்டி, பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
உடல் நிலை சரியில்லாததால், டில்லியில் கடந்த மாதம், 5ம்தேதி, நடந்த
விழாவில், கராஷிமா பங்கேற்கவில்லை. இதையடுத்து, டோக்கியோவில் இந்த விருதை,
பிரதமர் மன்மோகன்சிங், கராஷிமாவுக்கு, நேற்று வழங்கினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...