நவீன தொழில்நுட்பம் மற்றும் விரிவான முறையிலான ஆராய்ச்சி போன்ற
காரணங்களால், உலகளாவிய மருத்துவ கல்வியில், இந்தியா முக்கிய இடத்தைப்
பெற்றுள்ளது. இங்கு, நூற்றுக்கணக்காக மருத்துவ கல்லூரிகள் மற்றும்
பல்கலைகள் உள்ளதும் ஒரு காரணம்.
சீனாவைப் பின்பற்றி...
சமீப வருடங்களில், குறைந்த மற்றும் தரமான மருத்துவப் படிப்புக்கேற்ற
வெளிநாடாக சீனாவே விளங்கி வருகிறது. உலகத் தரத்திலான ஆசிரியர்கள்,
உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள், சீனாவை நோக்கி வெளிநாட்டு
மாணவர்கள் செல்வதற்கு முக்கிய காரணங்கள். ஆனால், கடந்த சில வருடங்களில்,
இந்தியாவும் சுதாரித்துக்கொண்டு, மருத்துவ துறையில் அதிக முதலீடுகளை
செய்து, மருத்துவக் கல்வியில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்
திட்டங்களைப் புதுப்பித்து, சீனாவின் வழியில் தானும் பயணப்பட
துவங்கியுள்ளது.
தரப்படுத்தும் நடவடிக்கைகள்
இந்திய மருத்துவ கல்வி நிறுவனங்களிலிருந்து தரமான மருத்துவர்களை
உருவாக்கும் வகையில், அரசு, பல கொள்கை முடிவுகளை வகுத்துள்ளது. அரசு
நிர்ணயித்த கட்டணம், தனியார் மருத்துவப் பல்கலைகளை தீவிரமாக கண்காணித்தல்,
மருத்துவ நுழைவுத்தேர்வில் கண்டிப்பான, கடினமாக முறைகளை கையாளுதல்,
பாடத்திட்டங்களை, அவ்வப்போது மதிப்பாய்வு செய்து மாற்றங்களை கொண்டுவருதல்,
புதிய ஆராய்ச்சிகளில் மருத்துவ பேராசிரியர்களை ஈடுபடுத்தல், நவீன
மருந்துகள், கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் எளிதாக கிடைக்கச் செய்தல்
போன்ற நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதன் மூலமாக, வெளிநாட்டு மாணவர்களை
ஈர்க்கும் செயல்பாடு நடைபெற்று வருகிறது.
அனைத்திற்கும் வாய்ப்பு
பலவிதமான மருத்துவ சிகிச்சை முறைகளை பின்பற்றும் உலகின் சில நாடுகளில்
இந்தியாவும் ஒன்று. இங்கே, அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம் மற்றும் யுனானி
போன்ற பல்வேறான மருத்துவ துறைகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு
மருத்துவ துறையிலும் ஆராய்ச்சி வாய்ப்புகள் உள்ளதோடு, அவற்றுக்கென்று
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிர்வாக அமைப்புகளும் உள்ளன.
இந்தியாவிலுள்ள சில மருத்துவ கல்லூரிகள், உலகளவில், சிறந்ததாக
கருதப்படுகின்றன. உலகளவில் சிறந்து விளங்கும் புகழ்பெற்ற மருத்துவ
நிபுணர்களில், பல இந்தியர்களும் அடங்கியுள்ளனர். அவர்கள், மேல்படிப்பை
வெளிநாடுகளில் முடித்தவர்களாயினும், தங்களின் ஆரம்பநிலை மருத்துவப்
படிப்பை, இந்தியாவில்தான் மேற்கொண்டனர். அதுதான் அவர்களின் படிக்கல்.
இரண்டாம் ஆண்டிலேயே மருத்துவமனை
இந்திய மருத்துவக் கல்வியைப் பொறுத்தவரை, ஒரு மாணவர், தனது இரண்டாமாண்டு
படிப்பின்போதே, மருத்துவமனை செல்லாம். ஆனால், சீனாவிலோ, (2, 3 மற்றும்
4வது செமஸ்டரின்போது ஏற்பாடு செய்யப்படும் வகுப்புகளுக்காக தவிர)
இன்டர்ன்ஷிப்பின்போது மட்டுமே மருத்துவனை செல்ல, மாணவர்கள்
அனுமதிக்கப்படுகிறார்கள். இதன்மூலம், சீனாவை விட, இந்தியாவில் மருத்துவம்
படிப்பவர்கள், அதிகளவிலான நடைமுறை மருத்துவ அனுபவத்தைப் பெறுகிறார்கள்
என்பது தெளிவாகிறது. மேலும், இந்நாட்டின் மருத்துவ மாணவர்கள், நடைமுறை
மருத்துவ அனுபவம் மற்றும் அறிவைப் பெறுவதற்கு, புகழ்பெற்ற மருத்துவர்களின்
குழுவிலும் இணைய அனுமதி உண்டு.
இந்தியாவின் பல புகழ்பெற்ற மருத்துவக் கல்வி நிறுவனங்கள், பல வெளிநாட்டு
மாணவர்களை கொண்டுள்ளன. இந்தியாவில் மருத்துவம் படிக்கவரும் வெளிநாட்டு
மாணவர்களுக்கு, கடுமையான விசா கெடுபிடிகள் என்று எதுவுமில்லை. இந்தியாவில்
மருத்துவம் படிக்க விரும்புவோர், மருத்துவ கல்வித்துறையில் உள்ள பெயர்பெற்ற
அமைப்புகளிடம் விசாரித்து, அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ளலாம்.
இந்திய மருத்துவ சேர்க்கை நடைமுறைகள்
இந்திய மருத்துவப் பல்கலைகளில், மருத்துவ சேர்க்கை செயல்பாடு, ஒவ்வொரு
ஆண்டும், மே மாதம் தொடங்குகிறது. அறிவியலை முக்கியப் பாடமாக கொண்டு, பள்ளி
மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத்தேர்வுகள், பொதுவாக, 2 முறைகளில் நடத்தப்படுகின்றன. அகில இந்திய நிலை மற்றும் மாநில அளவிலான நிலை போன்றவையே அவை.
மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவு மாணவர்கள்
குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள், பொது PC பிரிவு மாணவர்கள் 45%, OBC/SC/ST
பிரிவினர்(OBC-non creamylayer) 40% பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும்,
குறைந்தபட்சம், 17 வயதை கடந்திருக்க வேண்டும். அதேசமயம், 25 வயதை
தாண்டியிருக்கக்கூடாது.
இந்தியாவிலுள்ள சில புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனங்கள்
AIIMS - DELHI
CMC - VELLORE
JIPMER - PONDYCHERRY
ARMED FORCES MEDICAL COLLEGE - PUNE
MAULANA AZAD MEDICAL COLLEGE - DELHI
GRANT MEDICAL COLLEGE - MUMBAI
MADRAS MEDICAL COLLEGE - CHENNAI
ST. JOHN&'S MEDICAL COLLEGE - BANGALORE
BANGALORE MEDICAL COLLEGE - BANGALORE
STANLEY MEDICAL COLLEGE - CHENNAI
OSMANIA MEDICAL COLLEGE - HYDERABAD
CMC - VELLORE
JIPMER - PONDYCHERRY
ARMED FORCES MEDICAL COLLEGE - PUNE
MAULANA AZAD MEDICAL COLLEGE - DELHI
GRANT MEDICAL COLLEGE - MUMBAI
MADRAS MEDICAL COLLEGE - CHENNAI
ST. JOHN&'S MEDICAL COLLEGE - BANGALORE
BANGALORE MEDICAL COLLEGE - BANGALORE
STANLEY MEDICAL COLLEGE - CHENNAI
OSMANIA MEDICAL COLLEGE - HYDERABAD
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...