குறைந்த மார்க் வாங்கியதற்காக மாணவர்கள் தற்கொலை செய்யும் முடிவை
எடுக்கக் கூடாது என கலெக்டர் சமயமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாணவிகள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாவட்ட நிர்வாகத்திற்கு
மிகுந்த மனவருத்தத்தை அளித்துள்ளது. படிக்காதவர்கள் மேதைகளாகி நாட்டுக்கு
சாதித்துள்ளதை மாணவர்கள் கவனத்தில் கொண்டு, சாதிப்பதற்கு இன்னம் பல வழிகள்
உள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை மாணவர்கள் மாற்றிக் கொள்ளவேண்டும்.
குறைந்த மார்க் எடுத்து விட்டோம் என வருத்தப்பட வேண்டாம். அவர்களுக்கு நல்ல
சந்தர்ப்பங்கள் உள்ளன. மாணவர்கள் நாட்டின் வருங்கால தூண்கள் என்பதை மனதில்
கொண்டு தடைகளை படிக்கட்டுகளாக நினைத்து கடுமையாக உழைக்க வேண்டும்.
நல்ல பல வழிகளில் பெற்றோருக்கும், மாநிலத்திற்கும் மற்றும்
மாவட்டத்திற்கும் மாணவர்கள் பெருமை சேர்க்கவேண்டும். குறைந்த மார்க் பெற்ற
மாணவர்களை அவர்களது பெற்றோர், அவர்களுக்கு நல்ல புத்திமதியினை
எடுத்துரைத்து, நல்வழிபடுத்த அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 30ம் தேதி வரவுள்ளதை மனதில் கொண்டு
குறைந்தளவு மார்க் பெறுபவர்களின் பெற்றோர் மிகுந்த விழிப்புடன் கண்காணிக்க
வேண்டும். இத்தகவலை நெல்லை கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...