ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், ப்ளஸ் 2 வகுப்பு தேர்வில்
தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவி, மாணவியர்களுக்கு மேற்படிப்புக்கான
வழிகாட்டு நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடந்தது.
எனக்கு சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. என் அப்பா
எதிர்பார்க்காத அளவுக்கு படித்தேன். வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி
அடையவேண்டும் என போராடுங்கள். உண்மை என்றுமே கசக்கும். கல்வி ஆலோசனை என்பதை
எல்லாருமே செய்கின்றனர்.
தமிழகத்தில், 552 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. நண்பர்கள் கூறியதற்காக
கல்வியை தேர்வு செய்யாதீர்கள். எதிர்காலத்தில் எது உபயோகமான கல்வி என்பதை
விசாரித்து முடிவு எடுங்கள். எதில் வாய்ப்பும், வளர்ச்சியும் உள்ளதோ அந்த
பாடத்தை தேர்வு செய்யுங்கள்.
எல்லா பாடப்பிரிவுக்கும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் எல்லா
பாடப்பிரிவுக்கும் சமமான வாய்ப்புகள் இல்லை. எதில் வாய்ப்பு அதிகம் என்பது
தான் முக்கியம். எனது முதல் தேர்வு "டிரிபிள் இ" படிப்பு. இ.சி.இ., பாடத்தை
விட "டிரிபிள் இ" பாடத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரு படிப்புகள்
படித்தவர்களும் எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு செல்லலாம்.
இ.சி.இ., முடித்தவர், 95 சதவீதம் மாணவர்கள் ஐ.டி., துறைக்கு
செல்கின்றனர். ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் கூட "டிரிபிள் இ" படித்தவர்களை
வேலைக்கு கேட்கிறது, என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...