Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயப் பிரச்சினை - ஓர் ஆய்வு

          "தமிழ்நாடு திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் 2009" என்ற பெயரில் தமிழக அரசு வெளியிட்ட ஊதியக்குழு அரசாணையைத் தொடர்ந்து புதிய விகிதத்தில் பதவி உயர்வு ஊதிய நிர்ணயம் செய்வதில் இருக்கும் குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறதே தவிர இன்னும் தெளிவு கிடைத்தபாடில்லை. 

          இதனைத் தெளிவிக்கப் பல அரசாணைகளும் பல தெளிவுரைகளும் வெளியானபோதும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயப் பிரச்சினை - குறிப்பாக 2800 ரூபாய் தர ஊதியம் பெறும் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்றால் அவரது தனி ஊதியம் ரூ.750 அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து நிர்ணயம் செய்யப்படும் என்று கூறும் அரசுக் கடிதம் 8764 /சிஎம்பிசி / 2012-1/ 18.04.2012 நிதித் துறை மாதிரிக் கணக்கீடு (illustration) எதையும் இவ்வாணையுடன் இணைக்கவில்லை. பள்ளிக் கல்வித் துறைத் தணிக்கை அலுவலர் (மதுரை மண்டலம்) அவர்கள் உதயசங்கர் என்னும் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற நேர்வில் எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்வது என்பது குறித்து வழங்கிய தெளிவுரையில் 750 தனி ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக் கணக்கிட்டுள்ளார். இதை நாம் ஒரு மாதிரிக் கணக்கீடாக எடுத்துக் கொள்வோம். இதிலும்கூட கூட்டல் தவறாக உள்ளது. (படம்)
               தர ஊதியம் ரூ.2800 + தனி ஊதியம் ரூ.750 பெறும் நேர்வில் இதை ஏற்றுக் கொண்டாலும் 01.01.2006 முதல் தர ஊதியம் ரூ.4200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் கிடைக்கும் பணப்பலனை விடக் கூடுதலாக இது உள்ளதால் மூன்று நபர் கமிட்டியின் பரிந்துரைகளின்படி திருத்தப்பட்ட மறுநிர்ணய அரசாணை வெளியிடும்போது ரூ.2800 தர ஊதியம் பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4200 எனத் திருத்தி வெளியிட்டால் மிகையாகப் பெற்ற ஊதியத்தைத் திருப்பிக் கட்ட வேண்டிய சூழல் உருவாக வாய்ப்புள்ளது.
கணக்கீடு:
அடிப்படை ஊதியம் : 14040
தர ஊதியம் (கருத்தியலாக) : 4200
மொத்தம் : 18240
3% பதவி உயர்வு பணப்பலன் : 550
புதிய நிர்ணயம் : ரூ.14590 + 4600 =19190
தணிக்கைத் துறையால் வழங்கப்பட்ட விளக்கத்தின்படி நிர்ணயம் செய்தது : ரூ.19910
அதாவது 4200 தர ஊதியம் இருந்தால் கிடைக்கும் பணப்பலனை விட மாதம் ஒன்றுக்கு ரூ.720 மிகையாக உள்ளது. எதிர்காலத்தில் மொத்தமாகக் கணக்கிட்டு இத்தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என உத்தரவு வந்தால் ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்களின் சம்பளம் குறித்த பிரச்சினையுடன் குழப்பங்களும் மிகும் என்பதே நம் கருத்து.
அரசுக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்தும் 2800 தர ஊதியத்தையும் 750 தனி ஊதியத்தையும் இரத்து செய்துவிட்டு 4200 தர ஊதியம் வழங்கினால் போதும். அதுவும் 01.01.2006 முதல் வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டால் போதும். இப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம் - அரசு விரைந்து வழங்கும் என்று.
-
TESTF




4 Comments:

  1. அரசுக்கு கூடுதல் செலவு என்றால் இடைநிலை ஆசிரியர்களுக்கு 2800+750 லாபம் தானே.

    ReplyDelete
  2. இடைநிலை ஆசிரியர்களுக்கு
    தற்போதைய ஊதியம் 5200+2800=8000+ டிஏ (80%) 6400
    TOTAL=12400
    கேட்கும் ஊதியம் 9300+4200=13500+டிஏ (80%)10800=24300

    அரசுக்கு கூடுதல் செலவு ஒரு இடைநிலை ஆசிரியருக்கு
    24300-12400=11900.
    அரசுக்கு 5200+2800 வழங்குவதுதான் லாபமே தவிர ,9300+4200 வழங்கினால் நட்டம் ஏற்படும்.

    ReplyDelete
  3. .
    இடைநிலை ஆசிரியர்களுக்கு
    தற்போதைய ஊதியம் 5200+2800=8000+ டிஏ (80%) 6400
    TOTAL=14400
    கேட்கும் ஊதியம் 9300+4200=13500+டிஏ (80%)10800=24300

    அரசுக்கு கூடுதல் செலவு ஒரு இடைநிலை ஆசிரியருக்கு
    24300-14400=9900.
    அரசுக்கு 5200+2800 வழங்குவதுதான் லாபமே தவிர ,9300+4200 வழங்கினால் நட்டம் ஏற்படும்.

    ReplyDelete
  4. its not a important matter

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive