ஆரம்ப பள்ளிகள் தரம் உயர்த்தப்படாததால்
ஆசிரியர்கள், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 54 புதிய
ஆரம்ப பள்ளிகளை துவக்கவும், 50 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தியும், 100
உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் முதல்வர்
அறிவிப்பு
வெளியிட்டுள்ளார்.
ஆனால் இதில் ஆரம்ப பள்ளிகளை
நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தாததால் ஆசிரியர்கள் ஏமாற்றம்
அடைந்துள்ளனர். இதனால் அரசு துவக்கப் பள்ளி மாணவர்கள் 6ம் வகுப்புக்கு
சேருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளை உடனடியாக அறிவிக்க வேண்டும். புதிய 54 ஆரம்ப பள்ளிகளும் வரும் ஜூன் மாதம் முதல் செயல்பட வேண்டும். இதில் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர் பணியிடம் தோற்றுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...