நன்றாக ஓவியம் வரையும் திறன் உடைவர்கள் தங்கள் திறமையை மேலும்
வளர்த்துக் கொள்ள, சென்னை, அரசு கவின் கலை கல்லூரியில் பட்ட படிப்புகள்
காத்திருக்கின்றன.
இங்கு பட்ட படிப்புகளை முடிக்கும் மாணவர்களுக்கு, பத்திரிகை, விளம்பரம், சினிமா துறைகளில் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.பிளஸ் 2 முடித்துள்ள
மாணவர்கள், நுழைவு தேர்வு மூலம், இந்த கல்லூரியில் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த கல்லூரியில், நான்காண்டு இளங்கலை பட்ட படிப்பில், சிற்ப கலை, வண்ண
கலை, பதிப்போவிய கலை, காட்சிவழி தகவல் தொடர்பு, சுடுமண் சிற்ப கலை,
துகிலியல் கலை உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
அரசு கவின் கலை கல்லூரி, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, பெரியமேடு,
சென்னை - 3 என்ற முகவரியிலும், 044-2561 0878 என்ற எண்களை தொடர்பு கொண்டு,
தகவல்களை பெறலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...