சூலூர், கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில்,
பொன்விழா துவக்க விழா நடந்தது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின்
கீழ், கேந்திரிய வித்யாலய பள்ளிகள் செயல்படுகின்றன. மத்திய அரசு
ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்காக, 1963ல் நாடு முழுவதும் பள்ளிகள்
துவக்கப்பட்டன.
தற்போது, இந்தியாவில் ஆயிரத்து 86 பள்ளிகளும்,
மாஸ்கோ, டெக்ரான், காத்மாண்டு உள்ளிட்ட வெளிநாடுகளில் மூன்று பள்ளிகளும்
செயல்படுகின்றன. பள்ளிகள் துவக்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை
ஒட்டி, பொன்விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் துவங்கியுள்ளன.
சூலூர் விமானப்படைத்தளத்தில் உள்ள பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாக குழு தலைவர் ஏர் கமோடர் சவுத்திரி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் வரவேற்றார். பொன்விழா மலரை வெளியிட்டு எம்.பி., நடராஜன் பேசுகையில், "மாணவர்களின் மனதில் தேச பக்தியையும், வீரத்தையும் வளர்க்கும் விதத்தில் கேந்திரிய பள்ளிகள் செயல்படுகின்றன. தரமான, தகுதியுள்ள எதிர்கால இளைய தலைமுறையை உருவாக்கி வருகிறது.
பொள்ளாச்சி, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட எம்.பி. தொகுதிகளில் கேந்திரிய பள்ளிகள் இல்லை. கோவையில் கூடுதலாக பள்ளி துவக்கவும், மற்ற பகுதிகளிலும் புதிதாக பள்ளிகள் துவக்கவும், கல்வி கட்டணத்தை குறைக்கவும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது," என்றார்.
தொடர்ந்து மாணவ, மாணவியரின் பரதநாட்டியம், ஒடிசி நடனம் மற்றும் பாடல், ஆசிரியைகளின் வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...