பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்று
சான்றிதழில் (டிரான்ஸ்பர் சர்டிபிகேட்- டிசி) ரத்த குரூப் பற்றி தெரிவிக்க
வேண்டும் என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால் மாணவர்கள்,
பெற்றோர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
வெளிவந்துவிட்டநிலையில், மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ்
வழங்கும்போது அதில் கட்டாயம் ரத்த குரூப் பற்றி குறிப்பிட வேண்டும் என
கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மாணவர்கள் தங்கள் ரத்த
குரூப்பை உரிய வகையில் சோதித்து, தக்க சான்றுடன் வந்து, அதை பள்ளிகளில்
அளித்தால் மட்டுமே மாற்று சான்றிதழ் வழங்கப்படும் என கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும்
சிரமத்துள்ளாகியுள்ளனர். ரத்த பரிசோதனை மையங்களில் ரத்த குரூப் கண்டறிய
ரூ.100 வசூலிக்கின்றனர். இந்த சோதனைகளை நகர்புற மாணவர்கள் எளிதில் செய்ய
முடியும். ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு இது சிக்கலாக உள்ளது. கிராம
பகுதிகளிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று கேட்டால் இந்த வசதி இங்கு
இல்லை என கூறுகின்றனர். இதனால் கிராமப் புற மாணவர்கள் பக்கத்தில் உள்ள
நகர்களுக்கு சென்று, ரூ. 100 வரை செலவிட்டு ரத்த குரூப் அறிய வேண்டிய
நிலையில் உள்ளனர். ரத்த குரூப் சோதனையை பள்ளிகளிலேயே நடத்த வசதி செய்து
தந்தால் இந்த சிக்கலை தீர்க்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...