Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் இவ்வாண்டு நடைபெறும் பணிமாறுதலுக்கு தகுதியற்றவர்கள்.


          கலந்தாய்வில் பங்கேற்க குறைந்தபட்சம் ஒரு முழுமையான கல்வியாண்டு பணியாற்றியிருக்க வேண்டும். இருப்பினும் புதிதாக பணி நியமனம் பெற்றவர்கள் மற்றும் பதவியுயர்வு பெற்றவர்களுக்கு இதில் விலக்க அளித்து அரசாணையில் குறிப்பிடப்படும். ஆயினும் இந்த கல்வியாண்டிற்கான அரசாணை எண் 129ல் பதவியுயர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

                 பள்ளிக்கல்வித் துறையில் TET மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு   வழங்கப்பட்ட பணி நியமன ஆணையில் பள்ளிக் கல்வி இணை இயக்குனர் அவர்களால் 15 நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளது.

                அதில் 13வது நிபந்தனையாக  "TET மூலம் தேர்வான சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பள்ளியில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும்” என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே TET மூலம் தேர்வான ஆசிரியர்கள்  இவ்வாண்டு நடைபெறும் பணிமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது. 
 
             இதே தகவல் தொடக்கக்கல்வி துறையில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்களுக்கான 15 நிபந்தனைகளில் இல்லை என்பதால், இது பொருந்துமா என்பது கேள்விக்குறி. எனினும் 2வது நிபந்தனையின் படியும்  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படியும் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்படுவதால் "மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல்" கோர இயலாது.

             இருப்பினும் ஒரு ஆசிரியரின் மாறுதல் விண்ணப்பம் தகுதியானதா இல்லையா என தரம்பிரித்து ”அ” மற்றும் ”ஆ” பதிவேடுகள் தயார் செய்து முடிவெடுப்பது கல்வித்துறை அலுவலர்கள் தான். எனவே தாங்களும் தங்கள் பணி மாறுதலுக்கு விண்ணபிக்கலாம். பணி மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவுரையில் இறுதி கட்டத்தில் தங்களுக்கு சாதகமாக ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்த விண்ணப்பங்கள் நிச்சயம் பரிசீலிக்கப்படும்.




2 Comments:

  1. intha varusam tet illaya?

    ReplyDelete
  2. TRB Released PG notifications , special Teacher Notification and PGTamil medium cv

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive