தமிழக அரசு வரும் ஆண்டு முதல் ஒன்றாம்
வகுப்பிலிருந்து படிப்படியாக ஆங்கில வழிக் கல்வி முறையை மாநிலம் முழுவதும்
நடைமுறைப் படுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான பணிகள் துரிதமாக
முடுக்கி விடப் பட்டுள்ளன.
ஆறாம் வகுப்பிற்குக் கடந்த வருடத்திலேயே பள்ளிக்
கல்வித் துறையில் ஒரு பிரிவு ஆங்கிலக் கல்வி முறை அறிமுகப்
படுத்தப்பட்டது.
ஏற்கனவே செயல்வழிக் கற்றல் என்னும் அட்டைவழிக்
கற்றல் முறைக்கு ஆசிரிய அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துப்
போராடியதால் கடந்த சில வருடங்களாக அட்டைமுறை எளிமைப் படுத்தப்பட்டது.
தொடக்கப் பள்ளிகளில் செயல்வழிக் கற்றலுக்கான பதிவேடுகளையும் தொடர் மற்றும்
முழுமையான மதிப்பீட்டு முறைக்கான பதிவேடுகளையும் ஒருசேரப் பராமரிக்க
வேண்டியதாக இருந்தது. அண்மைக் காலமாக குறுவளமையக் கூட்டங்கள் இரத்து
செய்யப்பட்டதாலும், வளமையப் பயிற்றுநர்கள் பள்ளிக்கல்வித் துறைக்கு
முற்றிலுமாக ஈர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி
மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் SCERT யே இனிமேல் பணியிடைப் பயிற்சிகளை
நடத்தும் என்றும் தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது அமல்படுத்தப்
படவிருக்கும் ஆங்கிலக் கல்விமுறைக்கேற்ப செயல்வழிக் கற்றல் அட்டைகள்
அச்சிடப்பட்டு, கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பள்ளிகளுக்கு
விநியோகிக்கப்படுமா என்பது குறித்த குழப்பங்கள் தொடக்கநிலை ஆசிரியர்களிடையே
எழுந்த வண்ணம் உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...