பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே மாணவ,
மாணவிகளுக்கு புத்தகப் பை மற்றும் காலணி வழங்க வேண்டும் என்று பள்ளி
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
பயிலும்
மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச
புத்தகங்கள், சீருடை, சைக்கிள், புத்தக பை, காலணி போன்ற பல்வேறு பொருட்கள்
வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், வரும் கல்வியாண்டில் அரசின் இலவச
பொருட்களை பள்ளி திறந்த ஒரே வாரத்தில் வழங்குமாறு அந்தந்த பள்ளி
தலைமையாசிரியர்களை பள்ளி கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக இலவச
பொருட்களை கொள்முதல் செய்யவும் துறை ரீதியாக டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.
புத்தக பைகளை பொருத்தவரை மொத்தம் 13 லட்சம் பைகள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.19 கோடியே 79 லட்சமாகும். அதேபோல மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலணிகளையும் முதல் வாரத்திலேயே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.8 கோடியே 47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் அட்லஸ்களையும் (உலக வரைபடம்) உடனே கொள்முதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 11.85 லட்சம் அட்லஸ்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...