காரைக் கால் மாவட்டம் கீழ காசாகுடியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஹர்சதா
நவீன தெருவிளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார்.
அவரது சிந்தனையில் உதித்த தெரு
விளக்குக்கு நாகை மாவட் டம் தரங்கம்பாடியில் இயங்கி வரும் ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின்
ஆராய்ச்சியாளர்கள் ஜெயராஜ், முரளி மற்றும் கீழகாசாகுடி ஆத்மாலயா பள்ளி
ஆசிரியர்கள் வடிவம் கொடுத்தனர். இதையடுத்து இரவு நேரமானால் ஒளிரத் து
வங்கி, காலையில் வெளிச்சம் வந்தவுடன் அணைந்து விடும் வகையிலான நவீன
தானியங்கி தெரு விளக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவி ஹர்சதா
கூறியதாவது: மின்தட்டுப்பாட்டை குறைக்க புதிய கருவியை வடிவமைக்க வேண்டும்
என்று சிந்தித்தேன்.
அப்பொழுது உருவானதுதான் இந்த புதிய முயற்சி. மின்சாரத்தை அதிக அளவில்
பயன்படுத்துவதில் தெரு விளக்குகளுக்கு முக்கிய பங்கு உண்டு. எல்இடி பல்பை
பயன்படுத்தி, இந்த தானியங்கி தெருவிளக்கை உரு வாக்கியுள்ளேன். இந்த
தெருவிளக்கு வெளிச்சத்தின் தன்மைகேற்ப செயல்படும் வகையில்
உருவாக்கப்பட்டுள்ளது. எல்டிஆர் என்ற அமைப்பு இதற்கு உதவு கிறது. இருள்
தொடங்கியதும் தானாகவே ஒளிரத் தொடங்கும் இந்த தெருவிளக்கில் 5 வாட் மற்றும்
30 வாட் திறனுள்ள 2 எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டுள் ளது. மனிதர்கள்
மற்றும் வாகனங்கள் போன்றவை தெரு விளக்கு இருக்கும் இடத்தை நெருங்கும் போது
30 வாட் திறன் கொ ண்ட பல்பு தானாகவே பிரகாசமாக ஒளிர ஆரம்பிக்கும். மற்ற
நேரங்களில் 5 வாட்ஸ் பல்பு மட்டும் குறைந்த வெளிச்சத்தில் ஒளிர்ந்துகொண்டு
இருக்கும். இதன் மூலம் மின்சாரத்தை பெருமளவில் சேமிக்கலாம். பராமரிப்பு
தேவை யே இல்லாத இந்த தெரு விளக்கு பயன்பாட்டுக்கு வந்தால் மக்கள் பெரிதும்
பயனடைவார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...