சட்டசபையில் இன்று வணிக வரித்துறை மானியக்
கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் பி.வி. ரமணா பதில் அளித்து
பேசினார். அப்போது, அரசின் இரு துறைகளில் 6200 ஊழியர்கள் பணி நிரந்தரம்
செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் ரமணா மேலும் பேசுகையில், “வணிகவரித் துறையில் தற்போது சுமார் 4,500 தற்காலிகப் பணியிடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரந்தரமாக்கப்படாமல் உள்ளன. பணி நீட்டிப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஏற்படும் நிர்வாகச் சிக்கல்களைப் போக்க, 4500 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்படும். இதேபோல் பதிவுத்துறையில் 1700 தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
சென்னை வணிகவரி மண்டலத்தில் உள்ள சென்னை கிழக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, சென்னை வடக்கு ஆகிய நான்கு கோட்டங்களின் எல்லைகள் மறு சீரமைக்கப்படும்” என்றார். வரி செலுத்துவது தொடர்பாக வணிகர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம்கள் நடத்த ரூ.20 லட்சம் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...