அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மே 6ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், தமிழ், ஆங்கிலம்,
பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்,
உயிரியல், கணிப்பொறியியல் உள்ளிட்ட பாடங்களில், பி.ஏ., - பி.காம்., -
பி.எஸ்சி., உள்ளிட்ட பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன.
இந்தாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், மே 6ம் தேதி முதல்
வழங்கப்படுகின்றன. சென்னையில், ராணிமேரி, தியாகராஜர், புதுக் கல்லூரி,
மாநில கல்லூரியில், மே 6ம் தேதியிலிருந்தும், நந்தனம், விவேகானந்தா
உள்ளிட்ட மற்ற கல்லூரிகளில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான, மே 9ம்
தேதியிலிருந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து, பேராசிரியர் அருண் குமார் கூறியதாவது: கலை மற்றும்
அறிவியல் படிப்புகளில், பி.காம்., - பி.எஸ்சி., படிப்புகளுக்கு அதிக
வரவேற்பு உள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள்,
குறிப்பிட்ட பி.ஏ., படிப்புகளை தேர்ந்தெடுக்கின்றனர்.
வணிகவியல் பாடப்பிரிவுகளில் பயின்றவர்களும், வங்கி பணிகள், சி.ஏ.,
மேற்படிப்பு ஆகியவற்றை படிக்க வேண்டும் என எண்ணம் கொண்டவர்களும்,
பி.காம்.,மிற்கு விண்ணப்பிக்கின்றனர். இவ்வாறு, அருண் குமார் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...