ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ,
மாணவியருக்கு, தேர்வு முடிவுகள் வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே, 20ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், 508 அரசு, அரசு உதவி பெறும் தனியார்
சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை
தேர்வுகள், ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. அதில், ஆறாம் வகுப்பில், 24
ஆயிரத்து, 659, ஏழாம் வகுப்பில், 25 ஆயிரத்து, 707, எட்டாம் வகுப்பில், 27
ஆயிரத்து, 653, ஒன்பதாம் வகுப்பில், 26 ஆயிரத்து, 522 பேர் என, மொத்தம்,
ஒரு லட்சத்து, 4,541 பேர் தேர்வு எழுதினர்.
அதை தொடர்ந்து, தலைமையாசிரியர் அடங்கிய, 16 குழுக்கள்
அமைக்கப்பட்டது. அக்குழுவினர், ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று, சம்பந்தப்பட்ட
பள்ளி தலைமையாசிரியர் வழங்கிய தேர்வு முடிவுகளை ஆய்வு செய்தனர்.
அக்குழுவினர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, தேர்வு முடிவுகள் வெளியிட
முடியும்.
இந்நிலையில், மாணவ, மாணவியரின், தேர்வு முடிவுகள்
வெளியிடுவதற்கு, அங்கீகாரம் பெறுவதற்கான ஆலோசனை கூட்டம், நாமக்கல் தெற்கு
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று நடந்தது. மாவட்ட கல்வி
அலுவலர் திலகம் தலைமை வகித்தார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் கலந்து கொண்டு, தேர்வு
முடிவுகள் வெளியிடுவதற்கான முக்கிய ஆலோசனை வழங்கினார். அதை தொடர்ந்து,
தேர்வு முடிவுகள் வெடுயிடுவதற்கான அங்கீகாரம், நேற்று நடந்த ஆலோசனைக்
கூட்டத்தில் அளிக்கப்பட்டது.
அதன்படி, மே 20ம் தேதி, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ,
மாணவியருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இத்தேர்வில், தேர்ச்சி
பெறாத மாணவ, மாணவியர், உடனடியாக தேர்வு எழுதி, மீண்டும் பள்ளியில்
சேர்ந்து, தொடர்ந்து படிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...