2013-2014 ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறையின்
மானியக் கோரிக்கை "கொள்கை குறிப்பில்" (Policy Note) பக்கம் 137,138ல் 546
நடுநிலைப் பள்ளிகள் வரும் கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2012-2013 ஆம் ஆண்டு முதல் பள்ளிகள் தரம்
உயர்த்தப்பட மத்திய அரசு பரிசீலிக்காத போதும் 100 விழுக்காடு அருகாமையினை
(access) உறுதி செய்ய மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. இருப்பினும் 546
பள்ளிகள் தரம் உயர்த்தப்பட வேண்டியுள்ளது,
இதற்கான முயற்சிகள் வரும் ஆண்டுகளில்
படிப்படியாக மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து நடுநிலைப்பள்ளிகள்,
உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார்
என்ற எதிர்ப்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...