பள்ளிக் கல்வித் துறையில் கருணை அடிப்படையில்
காத்திருப்போருக்கு 396 இளநிலை உதவியாளர் பணியிடத்தை வழங்க வேண்டும் என
மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை
விடுத்து தமிழக முதல்வர் ஜெலலிதாவை நேரில் சந்தித்து கடிதம் அளித்தார்.
கடிதத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு
பணியில் பணிபுரிந்து கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருக்கும் போது
அகால மரணடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை
உதவியாளர் பணிக்கு 396 பேர் தேர்வு செய்யப்பட்டு இதுநாள் வரை பணி
வழங்கப்படாமல் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் மாவட்ட கல்வி அதிகாரி
சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று குடும்ப நிலை, வேலை நிலவரம்
பற்றி குறிப்பு எடுத்துக் கொண்டு சில சான்றுகளை சமர்பிக்கும்படி
ஆணையிட்டுள்ளனர்.
அதன்படி சான்றுகளை கொடுத்தும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே பணி வழங்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு பணி வழங்கப்படாததால், அவர்கள் மிகுந்த வேதனையில் மூழ்கியுள்ளனர். எனவே தமிழக முதல்வர் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்காக காத்திருக்கும் 396 பேருக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பணி ஆணை வழங்கி சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களை காப்பாற்றிட வேண்டுகிறேன் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...