மருத்துவப் படிப்பிற்கு, சீட் வாங்கித் தருவதாக, 30 லட்சம் ரூபாய்
பெற்று, மோசடி செய்த இருவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது
செய்தனர்.
எனினும் இவருக்கு, அரசு மருத்துவக் கல்லூரியில், சீட் கிடைக்காது
என்பதால், தனியார் மருத்துவக் கல்லூரியில் முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது, பம்மலைச் சேர்ந்த நாகராஜ், 44, மற்றும் அவரது மைத்துனி வசந்தி
என்ற வசந்தி மாமி, 51, என்பவரும், தங்களுக்கு, காஞ்சி சங்கர மடத்தில், அதிக
செல்வாக்கு உள்ளதாகவும், பாலாஜி சுவாமிகள் என்பவர் மூலம், மருத்துவ சீட்
வாங்கித் தருவதாகவும், அதற்கு, 30 லட்சம் ரூபாய் ஆகும் என்று கூறியுள்ளனர்.
இதை நம்பிய முத்துக்கிருஷ்ணன், பாலாஜி சுவாமிகள், வசந்தி மாமி மற்றும்
நாகராஜனிடம், 30 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி,
அட்மிஷன் வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து, சென்னை மத்திய
குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், முத்துக்கிருஷ்ணன்
ஏமாற்றப்பட்டது உண்மை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் கமிஷனர் நல்லசிவம் உத்தரவை
அடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு நாகராஜன், வசந்தி ஆகிய இருவரையும் கைது
செய்து விசாரித்தனர்.
அப்போது இருவரும், பாலாஜி சுவாமிகள் என்பவருடன் சேர்ந்து,
மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெபமணி என்பவரிடம், பங்கு வர்த்தகத்திற்கு, 10
லட்சம் ரூபாயை பெற்று மோசடி செய்ததும் தெரிய வந்தது. இருவரையும் கோர்ட்டில்
ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய, பாலாஜி சுவாமியை,
போலீசார் தேடி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...