எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்களை அனைத்துப் பாடத்திட்ட
மாணவர்களும் மே 20-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாநில பாடத்திட்ட
மாணவர்கள் விண்ணப்பத்தில் கோரியுள்ள மாற்றுச் சான்றிதழை (டி.சி.) வரும் மே
30-க்குள் அளித்தால் போதும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம்
தெரிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 20-க்குள் வெளியிடப்படவில்லையென்றால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ் தவிர்த்து மீதமுள்ள அனைத்துச் சான்றிதழ் நகல்களையும் குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்துப் பாடத்திட்ட மாணவர்களும் தங்களது மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழை இணைக்கும்போது தங்கள் தேர்வு பதிவு எண் அல்லது விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு நேரிலோ, தபால் மூலமாகவோ, செயலர், தேர்வுக் குழு, சென்னை-10 என்ற முகவரிக்கு மே 30-க்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் 2013-14 ஆம் ஆண்டு மருத்துவப் பட்டப்படிப்புக்காக மே 20-க்குள் சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்கள் எந்த காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படாது. எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர இதுவரை 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...