ஒன்றாம் வகுப்பில் இருந்து ஆங்கிலத்தை கட்டாய
பாடமாக்க உத்திர பிரதேச அரச உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல்
போதிய அளவு ஆங்கில பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை.
மத்திய
உயர்கல்வித்துறை முன்னாள் தலைவர் அசோக் கங்குலியின் அறிக்கையின்படி, உத்திர பிரதேசம் முழுவதும் 2 முதல் 2.5
சதவீதம் ஆங்கிலம் தெரிந்த துவக்க மற்றும் உயர்கல்வி ஆசிரியர்கள் இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள
அறிவிப்பின்படி உத்திர பிரதேச பள்ளிகளில் 3 லட்சம் ஆசிரியர்கள்
தேவைப்படுகின்றனர். இதே போன்று பீகாரில் 2.60 லட்சமும், மேற்கு வங்கத்தில்
ஒரு லட்சமும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. உத்திர பிரதேசத்தில் 1.43
லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வி
கழகம் தெரிவித்துள்ளது.
8-ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சென்னையில் ஆர்ப்பாட்டம்
ReplyDelete8-ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சென்னையில் ஆர்ப்பாட்டம்ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 8-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புக் கூட்டம், மாநிலத் தலைவர் அண்ணாதுரை தலைமையில்கடலூரில் வியாழக்கிழமை நடந்தது.மாவட்டத் தலைவர் ராஜா, பொருளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மகளிரணி நிர்வாகி ஜீவா, மாநில பொதுச்செயலர் தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.6-வது ஊதியக் குழு குறைபாடுகளை களைய அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கானஅடிப்படை ஊதியத்தை ரூ.5,200-லிருந்து ரூ.9,300-ஆக உயர்த்த வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியதிட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்8-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யாமல் நிலுவையில் வைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு விரைவில் பணி நியமனம் செய்யப்படும். முதல்வர் அறிக்கை விரைவில் வெளியாகும்....
ReplyDeletesir tet exam pathi announce next weak varum appadinu solranga apura tet exam cancel pannanum appadinu solli poratamu nadatha porangala ethu tha unmai
ReplyDelete