தமிழகம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, பள்ளி
வளாகங்களிலேயே, இணையதளம் மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய,
பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள்
ஏற்பாடு செய்துள்ளனர்.
இவர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளில், தங்களின்
கல்வித்தகுதியை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய, பள்ளிகளில்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர், தங்கள் கல்வித் தகுதியை, வேலை
வாய்ப்பக இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
மாணவ, மாணவியர், மதிப்பெண் சான்றிதழ் பெற, பள்ளிக்கு செல்லும்போது,
தங்களது குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.
பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியை, ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு
செய்துள்ளவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை, உடன் எடுத்து செல்ல
வேண்டும்.
புதிதாக பதிவு செய்வோருக்கு, புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை,
பதிவு செய்யும் நாளிலேயே, உடனுக்குடன் வழங்கப்படும். மாணவ, மாணவியர்,
மாற்றுத் திறனாளிகளாக இருந்தால், தங்களுடைய கல்வித் தகுதியை, பள்ளிகளில்
பதிவு செய்த பின், தங்களுடைய முன்னுரிமையை, வேறு ஒரு வேலைநாளில், அந்தந்த
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு, நேரில் சென்று பதிவு செய்து கொள்ள
வேண்டும்.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், 27ம் தேதி, பள்ளிக் கல்வித் துறையினரால்
வழங்கப்பட உள்ளது. எனவே, மாணவ, மாணவியர், 27ம் தேதியிலிருந்து, அடுத்த
மாதம், 10ம் தேதிக்குள், அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு செய்து, வேலைவாய்ப்பு
அடை யாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்யப்படும், மாணவ,
மாணவியருக்கு, பிளஸ் 2 கல்வித் தகுதிக்கு, 27ம் தேதியிட்ட பதிவு மூப்பு
வழங்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...