டி.என்.பி.எஸ்.ஸி., குரூப்-2 தேர்வு வழக்கில் கைது செய்யப்பட்ட, வணிக
வரித்துறை துணை கமிஷனரை, போலீஸார், மூன்று நாள், காவலில் எடுத்துள்ளனர்.
.
வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீஸுக்கு மாறியது. கடலூரை சேர்ந்த சிவகுரு
உள்பட, 13 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தனர். கடந்த, 2011ல்
நடந்த குரூப்-2வில் தேர்வாகி, நாகை மாவட்ட வணிக வரித்துறையில் துணை
கமிஷனராக பணி புரியும் பண்ரூட்டியை சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கு,
2012ல் நடந்த குரூப்-2 தேர்வு வினாத்தாள் வெளியான பிரச்னையில்,
சிவகுருவுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும், 2011ல் நடந்த குரூப்-2 தேர்வில், வெளி மாநிலத்தில் இருந்து,
வினாத்தாளை விலைக்கு வாங்கி பலர் தேர்வு எழுதி, பணியில் சேர்ந்திருப்பதும்,
புரோக்கர்களை விசாரித்ததில் தெரியவந்தது. அவ்வாறு தேர்வு எழுதி, பணியில்
சேர்ந்தவர்களில் துணை கமிஷனர் ரவிகுமாரும் ஒருவர்.
தனக்காக வினாத்தாள் வாங்கிய இவர், பணியில் சேர்ந்த பின், சிவகுருவுடன்
இணைந்து, அடுத்து வந்த தேர்வுகளுக்கு புரோக்கராக செயல்பட்டுள்ளார். இதனால்,
கோவை சி.பி.சி.ஐ.டி., போலீஸார் கடந்த, 14ம் தேதி ரவிக்குமாரை கைது
செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடையவர்களை கண்டறிய, ரவிக்குமாரை காவலில் எடுத்து
விசாரிக்க, ஈரோடு ஜே.எம்., 3 நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல்
செய்திருந்தனர். நேற்று, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் டி.எஸ்.பி., ராஜராஜன்
தலைமையிலான போலீஸார், ரவிக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி கவிதா வழக்கை விசாரித்து, ரவிக்குமாரை, மூன்று நாள் கஸ்டடியில்
வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., போலீஸார்
கூறுகையில், "ரவிக்குமாரிடம் நடத்தப்படும் விசாரணையில், மோசடி செய்து
பணியில் உள்ள பலர் சிக்குவர்" என்றனர்.
இதனால், 2011ல் நடந்த குரூப்-2 தேர்வில் மோசடி செய்து, பணிக்கு வந்தவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...