விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
சார்பில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வருகிற 25-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கும் இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட பிரபல தனியார் நிறுவனங்கள் பங்கேற்க இருக்கிறது. இதில் அந்தந்த நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதற்கான கல்வித் தகுதி 8,10, 12, தொழிற்பயிற்சி, பட்டயம் மற்றும் பட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்வு பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு சேர்வதற்கான வயது வரம்பு 25-க்குள் இருக்க வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்கிறவர்களின் வேலைவாய்ப்பு பதிவு எக்காரணம் கொண்டு நீக்கம் செய்யப்படமாட்டாது.
இதில், கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்திற்கு நேரில் வந்து பயனடையும்மாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைசெல்வி தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...