என்ஜினியரிங் கவுன்சிலிங் வரும் ஜூன் 21ம் தேதி
முதல் ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலை., துணைவேந்தர்
(பொறுப்பு) காளிராஜ் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:
இந்த வருடம் 2 1/2 லட்சம் விண்ணப்பங்கள்
அச்சடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் 50 ஆயிரம் கூடுதலாக
அச்சடிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2 லட்சம் இடங்கள்
நிரப்பப்படும்.என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஜூன் 21-ம்தேதி தொடங்கி ஜூலை 30-ம்
தேதி வரை நடைபெறுகிறது. ரேண்டம் எண் ஜூன் 5-ம்தேதியும் ரேங்க் பட்டியல்
12-ம் தேதியும் வெளியிடப்படும். ஆகஸ்டு 1-ம் தேதி என்ஜினீயரிங் கல்லூரிகள்
திறக்கப்படும். பி.இ.ஆர்க்கிடெக் படிப்பிற்கு தனியாக அறிவிப்பு
வெளியிடப்படும் என்று கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...